search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டேட்டிங் ஆப்"

    • டேட்டிங் ஆப்ஸ் மூலம் நிதி மோசடிகள் அதிகரித்து வரும் வேளையில் இந்த ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.
    • இதுபோன்ற செயலிகள் மூலம் 48% பேர் மன உளைச்சலுக்கு ஆளாவதாக தெரிவித்துள்ளனர்.

    ஜூலியோ எனப்படும் ஆன்லைன் சிங்கிள்ஸ் கிளப், YouGov உடன் இணைந்து, இந்தியாவில் மேட்ச்மேக்கிங் ஆப் அனுபவங்கள் குறித்த ஆய்வின் முடிவுகளை சமீபத்தில் வெளியிட்டது.

    சமீப காலமாக இந்தியாவில் டேட்டிங் ஆப்ஸ் மூலம் நிதி மோசடிகள் அதிகரித்து வரும் வேளையில் இந்த ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.

    இந்த ஆய்வில் பதில் அளித்த 78% பெண்கள் போலியான Profile-களை எதிர்கொண்டதாக தெரிவித்தனர். 82% பெண்கள் இதுபோன்ற செயலிகளில் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அரசின் அடையாள அட்டைகளை கட்டாயமாக்க வேண்டும் எனக் கோரியுள்ளனர். மேலும் இதுபோன்ற செயலிகள் மூலம் 48% பேர் மன உளைச்சலுக்கு ஆளாவதாக தெரிவித்துள்ளனர்.

    74% பேர் தங்கள் சுயவிவரங்கள் தாங்கள் தேர்ந்தெடுக்கும் நபர்களுக்கு மட்டுமே தெரிய வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

    • டிண்டர் எனும் ஆப் மிகவும் பிரபலமானது.
    • டெல்லியில் சிவில் சர்வீஸ் தேர்வுக்கு படித்துக் கொண்டு இருக்கும் இளைஞர் டிண்டரில் வர்ஷா என்ற பெண்ணிடம் பேசி வந்துள்ளார்.

    தற்பொழுது உள்ள சமூதாயத்தில் இளைஞர்கள் தங்களின் வாழ்க்கை துணையை தேர்ந்தெடுப்பதற்கு பல ஆப்கள் மற்றும் வெப்சைட்டுகள் வந்துவிட்டது.

    அதில் டிண்டர் எனும் ஆப் மிகவும் பிரபலமானது. இதில் உங்களுக்கு பிடித்த பெண்களுக்கு அவருக்கும் உங்களை பிடித்திருந்தால் அவர்களுடன் நீங்கள் பேசலாம். இவ்வாறு டிண்டரில் தன்னுடைய வாழ்க்கை துணை கிடைத்தவர்கள் ஏராளம்.

    ஆனால் இதே டிண்டர் ஆப்பில் நாம் பல்வேறு மோசடிகளையும் கேள்வி பட்டிருப்போம் அதேப் போல் மற்றொரு மோசடி டெல்லியில் நடந்துள்ளது.

    டெல்லியில் சிவில் சர்வீஸ் தேர்வுக்கு படித்துக் கொண்டு இருக்கும் இளைஞர் டிண்டரில் வர்ஷா என்ற பெண்ணிடம் பேசி வந்துள்ளார். இவ்வாறு டிண்டரில் ஆரம்பித்த இந்த காதல் நாளடைவில் வளர்ந்துள்ளது. வர்ஷாவின் பிறந்தநாளை டெல்லியில் உள்ள ப்ளாக் மிரர் கஃபேவில் கொண்டாட வருகிறார் அந்த இளைஞன்.

    கஃபேவில் இருவரும் பேசிவிட்டு இரண்டு கேக்குகள், ஸ்னாக்ஸுகள் மற்றும் சிலவற்றை ஆர்டர் செய்துள்ளனர். ஆனால் திடீரென்று வர்ஷா தனது குடும்பத்தில் ஏதோ பிரச்சனை என்று கூறிவிட்டு அவசரமாக அந்த இடத்தை விட்டு செல்கிறார் வர்ஷா.

    இதைதொடர்ந்து, ஆர்டர் செய்ததை சாப்பிட்டுவிட்டு பில் செலுத்தலாம் என்று சென்ற இளைஞனுக்கு காத்திருந்தது அதிர்ச்சி. பில் கட்டணம் சில ஆயிரத்தில் இல்லை 1 லட்சத்து 21 ஆயிரம் ரூபாய் என்று இருந்தது.

    செய்வதறியாமல் திகைத்து நின்ற இளைஞனிடம் இருந்து அந்த கஃபே உரிமையாளர் பணத்தை செலுத்தும்படி மிரட்டியுள்ளார்.

    வேறு வழியில்லாமல் அவரும் பணத்தை கட்டிவிட்டு நேராக போலீஸ் ஸ்டேஷன் சென்று புகாரளித்துள்ளார்.

    இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்ததில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

    அதில், பிளாக் கஃபேவை பாவா, அன்ஷ் க்ரோவர் மற்றும் வன்ஷ் பாவா ஆகிய மூவரும் இணைந்து நடத்தி வருகின்றனர்.

    வர்ஷா என்ற பெண்ணும் இதில் கூட்டு களவானி என்றும் அவளின் உண்மையான பெயர் அஃப்சன் பர்வீன் என்றும் தெரியவந்துள்ளது.

    ஆர்யன் அந்த இளைஞரிடம் டிண்டரில் பேசி, பர்வீனின் புகைப்படத்தை வர்ஷா என்ற பெயரில் அனுப்பி வைத்து, கடந்த ஜூன் 23 ஆம் தேதி அந்த கஃபேவிற்கு வரவழைத்துள்ளது தெரியவந்துள்ளது.

    அவள் திடீரென குடும்ப அவசரம் என்று சென்றவுடன், அந்த கஃபேவை நடத்தி வந்த ஆர்யன் வேண்டுமென்றே அந்த பில்லை கொடுத்துள்ளார். இதை ஒரு குழுவாக செய்துள்ளனர்.

    மேலும், அந்த பெண்ணுக்கு போலீசார் வலை வீசிய நிலையில், அவள் ஷாதி டாட் காம் திருமண ஆப் மூலம் சந்தித்த ஒரு ஆணுடன் டேட் செய்து கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, இந்த பெண் உள்பட கஃபே உரிமையாளர்களையும் போலீசார் பிடித்து காவலில் வைத்துள்ளனர்.

    இச்சம்பவம் டெல்லியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டிண்டர் உபயோகிக்கும் இளைஞர்கள் இதை கருத்தில் கொண்டு உஷாராக இருக்க வேண்டும் என்ற சூழ்நிலை உருவாகியுள்ளது.

    ரஷியாவில் டேட்டிங் ஆப் மூலம் ஆண்களை கவர்ந்து, அவர்களை கொலை செய்து, சமைத்து உண்ணும் பெண் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். #Russia #DatingApp
    மாஸ்கோ:

    ரஷியாவில் நடாலியா பக்‌ஷீவா என்ற பெண்ணும், அவரது கணவரான டிமிட்ரி பக்‌ஷீவா என்பவரும் பல ஆண்டுகளாக மனிதர்களை கொலை செய்து, அவர்களை சமைத்து உண்டு வந்துள்ளனர்.

    இந்நிலையில், சமீபத்தில் தனது கணவருடன் நெருக்கமாக இருந்த ஹோட்டல் ஊழியரான எலேனா என்ற பெண்ணை தனது கணவரின் மூலமாகவே கொலை செய்ய வைத்துள்ளார் நடாலியா. மனைவியின் வற்புறுத்தலினால் தோழியை கொலை செய்த ட்மிட்ரி, அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி மனைவியிடம் கொடுக்க அவர் அதனை சமைத்து உண்டுள்ளார்.

    ஹோட்டல் ஊழியர் கொலை வழக்கை விசாரித்து வந்த காவல்துறையினர், நடாலியாவின் வீட்டை சோதனை செய்ததில், மனித மாமிசங்களின் மீதமும், தோல் போன்றவையும் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். வீட்டின் குளிர்சாதன பெட்டியில் இருந்த மாமிசம், கொலை செய்யப்பட்ட ஹோட்டல் ஊழியருடையது என்பது ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

    இதையடுத்து கைது செய்யப்பட்டுள்ள தம்பதியிடம் விசாரணை நடத்தியதில், டேட்டிங் ஆப் மூலம் 30 பேர் வரை ஏமாற்றி வரவழைத்து கொன்று தின்றதாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.

    ஏற்கனவே, நடாலியாவின் கணவர் ட்மிட்ரி மீது நிரூபிக்கப்படாத நரமாமிச குற்றச்சாட்டுகள் இருப்பதாகவும், காசநோய் இருப்பதால் முழுமையாக விசாரணைக்கு உட்படுத்தப்படவில்லை எனவும் கூறப்படுகிறது. #Russia #DatingApp
    டேட்டிங் ஆப் மூலமாக பல பெண்களை கவர்ந்து அவர்களை உணவகத்துக்கு அழைத்து அங்கு சாப்பிட்ட பின்னர், பில் கொடுக்காமல் தப்பித்துச் செல்லும் நபர் போலீசில் சிக்கி தண்டனையை எதிர்நோக்கியுள்ளார்.
    நியூயார்க்:

    அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் மாநிலத்தை சேர்ந்த 45 வயதான பால் கோன்ஸாலெஸ் என்ற நபர் டேட்டிங் ஆப்ஸ் மூலமாக பெண்களை பேசி மயக்கி பின்னர் அவர்களுக்கு விருந்து தருவதாக கூறி, ஓட்டலுக்கு அழைத்துச் செல்வார். நன்றாக சாப்பிட்ட பின்னர் அந்த பெண்ணை தனியாக கழட்டிவிட்டு அங்கிருந்து தப்பிக்கும் வழக்கத்தை பால் கொண்டுள்ளார்.

    சுமார் 8 பெண்களை இவ்வாறு பால் ஏமாற்றியுள்ளார். இந்திய மதிப்பில் சுமார் 67 ஆயிரம் வரை இது போல நூதனமாக ஏமாற்றிய அவரை ஓட்டல் கேமராக்கள் மூலமாக போலீசார் பிடித்தனர். தற்போது கோர்ட்டில் நடந்து வரும் இந்த வழக்கில் பால் தண்டிக்கப்பட்டால் அவருக்கு 13 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க வாய்ப்பு உள்ளது. 
    ஃபேஸ்புக் F8 டெவலப்பர்கள் நிகழ்வில் தனது டேட்டிங் சேவையை ஃபேஸ்புக் அறிமுகம் செய்த நிலையில், இந்த சேவைக்கான சோதனை துவங்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. #Facebook


    ஃபேஸ்புக் நிறுவனத்தின் F8 நிகழ்வு இந்த ஆண்டு மே மாதத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் பல்வேறு அறிவிப்புகளுடன் ஃபேஸ்புக் டேட்டிங் சேவை சார்ந்த அறிவிப்பும் இடம்பெற்றிருந்தது. 

    இந்நிலையில், அறிவிப்பு வெளியான சில மாதங்களில் டேட்டிங் சேவை சோதனை செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஃபேஸ்புக் பணியாளர்கள் மத்தியில் முதற்கட்டமாக சோதனை செய்யப்படுவதாக ஆப் ஆய்வாளர் ஜேன் மேன்சுன் வாங் தெரிவித்துள்ளார். இதற்கான ஆதாரம் சேவையின் சோர்ஸ் கோடுகளில் இடம்பெற்று இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

    டேட்டிங் ப்ரோஃபைல்களில் போலி தகவல்களை பதிவு செய்ய ஃபேஸ்புக் கேட்டுக் கொண்டிருப்பதாகவும், அனைத்து தகவல்களும் பொது வெளியீட்டுக்கு முன் அழிக்கப்பட்டு விடும் என உறுதியளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் புதிய சேவை சோதனை செய்யப்பட்டாலும் துன்புறுத்தலுக்கு எதிரான விதிமுறைகள் இந்த சேவைக்கு பொருந்தும் என எச்சரித்துள்ளது.



    புதிய சேவையின் சைன்-அப் பக்கத்தில் பாலினம், இருப்பிடம் மற்றும் நீங்கள் விரும்பும் பாலினம் சார்ந்த தகவல்களை பதிவு செய்ய வேண்டும். வொங் சைன்-அப் விவரங்களை பதிவு செய்திருந்தாலும், அவரது ப்ரோஃபைல் உருவாக்க முடியவில்லை. சோதனை வெற்றிகரமாக நிறைவுற்றதும், வெளியிடப்படும் என்றும், பிடிக்காத பட்சத்தில் இந்த சேவை எப்போது வேண்டுமானாலும் ரத்து செய்யப்படலாம் என ஃபேஸ்புக் அறிவித்திருக்கிறது.

    ஃபேஸ்புக் டேட்டிங் சேவையில் பயனர்கள் தங்களது ஃபேஸ்புக் ப்ரோஃபைலில் இருந்து வித்தியாசமான டேட்டிங் ப்ரோஃபைலை உருவாக்க முடியும். பயனர் தேர்வு செய்யும் விருப்பத்திற்க்கு ஏற்ப ப்ரோஃபைல்களை வரிசைப்படுத்தும். இவ்வாறு பொதுவாக இருக்கும் விவரங்கள், மியூச்சுவல் நண்பர்களின் ப்ரோஃபைல்கள் இடம்பெறும் நிலையில், க்ரூப் மற்றும் ஈவன்ட்களில் இருந்தும் ப்ரோஃபைல்களை பார்க்க முடியும் என கூறப்படுகிறது. #Facebook
    ×